தமிழ்நாடு

இந்த மாதம் பவுர்ணமி கிரிவலத்திற்கு அனுமதி உண்டா? திருவண்ணாமலை நிர்வாகம் அறிவிப்பு!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, தளர்வுகள் இல்லாத ஊரடங்கு என மாறி மாறி அமல்படுத்தப்பட்டு வந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து இந்த மாதம் கிரிவலத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளால் திருவண்ணாமலையில் மார்கழி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை என திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. திருவண்ணாமலையில் பல மாதங்களாக கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த மாதமும் தடைவிதிக்கப்பட்டுள்ளது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version