இந்தியா

மூக்கு வழி ஸ்ப்ரே தடுப்பு மருந்து: இந்தியாவில் அறிமுகம் செய்யும் இங்கிலாந்து!

Published

on

இந்தியாவில் உள்ள பொதுமக்கள் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களை காத்துக் கொள்ள தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன என்பதை ஏற்கனவே பார்த்து இருக்கிறோம். அந்த வகையில் தற்போது விறுவிறுப்பாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருவதாகவும் 50 சதவீதத்துக்கும் அதிகமாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வகையில் தற்போது கொரோனா பரவலை தடுப்பதற்காக மூக்கு வழியாக செலுத்தும் ஸ்பிரே தடுப்பு மருந்தை இங்கிலாந்து நாட்டின் போக்ஸ்பயோ என்ற நிறுவனம் கண்டுபிடித்த நிலையில் அந்த மருந்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மூக்கு வழியாக செலுத்தப்படும் ஸ்பிரே தடுப்பு மருந்து கொரோனா பாதிப்பில் இருந்து 63% பொது மக்களை காக்கும் தன்மை உடையது என்றும் கூறப்படுகிறது. இந்த மருந்தை இந்தியாவில் அறிமுகம் செய்யும்போது இந்தியாவிலேயே உற்பத்தி செய்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.

இந்த மருந்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி பெறுவதற்காக விண்ணப்பிக்க பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல்கட்டமாக இந்த மூக்கு வழியாக ஸ்பிரே தடுப்பு மருந்தை 648 சுகாதார பணியாளர்களுக்கு சோதனை செய்து பார்த்ததாகவும் அந்த சோதனையில் பாதிப்பை தடுப்பதில் 63% செயல்திறனை கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த தடுப்பு மருந்தை இரண்டு நாசிகளிலும் தலா இரண்டு ஸ்பிரே ஒருவர் தானாக செலுத்திக் கொள்ளலாம் என்றும் அவ்வாறு செலுத்திக் கொண்டால் 6 முதல் 8 மணி நேரம் வரை வைரஸில் இருந்து பாதுகாப்பு தரும் என்றும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் செலுத்துக் கொண்டாலும் 100% பயன் அளிப்பதில்லை என்பதால் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் இந்த ஸ்பிரே மருந்தை பயன்படுத்திக் கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version