உலகம்

‘இப்படி எலும்பும் தோலுமா போயிட்டாரே..!’- கிம்முக்காக வருந்தும் வடகொரியர்கள்

Published

on

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், கடந்த சில மாதங்களில் எடை குறைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இது குறித்து அந்நாட்டு மக்கள் வருந்துவதாக அரசு சார்பில் நடத்தப்படும் வட கொரிய செய்தித் தாள் ஒன்று கூறியுள்ளது.

கடந்த ஆண்டு கிம்முக்கு பல்வேறு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக தகவல்கள் வந்தன. இதைத் தொடர்ந்து அவர் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளிலும், பொது இடங்களிலு வருவதைத் தவிர்த்து வந்தார். பல மாதங்கள் அவர் எங்கே இருக்கிறார் என்பதே பெரும் புதிராக இருந்தது. இந்நிலையில் அவர் சில நாட்களுக்கு முன்னர் அரசு சார்ந்த ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவர் முன்னர் இருந்ததை விட மெலிந்துவிட்டது போல தெரிந்தது.

இதையடுத்துத் தான் வட கொரிய மக்கள் கிம்முக்காக வருந்துவதாக செய்தி வெளி வந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று, சர்வதேச அழுத்தம், பொருளாதாரத் தடைகள் மற்றும் அண்டை நாடுகளுடனான நல்லுறவில் சுணக்கம் எனப் பல்வேறு காரணங்களால் வட கொரியா பொருளாதார ரீதியில் பின்னடைவைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version