உலகம்

தடுப்பூசி வேண்டாம், வேப்பிலை, உப்புக்கரைசல் போதும்: வடகொரியா பிடிவாதம்!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க உலகமே தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில் வடகொரியா மட்டும் தடுப்பூசி எங்களுக்கு தேவையில்லை என்றும் உப்புக் கரைசல் மற்றும் வேப்பிலை சிகிச்சை போதும் என்றும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில நாட்களாக வடகொரியாவில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது வட கொரியாவில் சுமார் 20 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது .

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக வட கொரியாவில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது. சீனா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளும் தடுப்பூசி தந்து உதவ தயாராக இருப்பதாகவும் அறிவித்திருந்தது .

ஆனால் வட கொரியா பிடிவாதமாக தங்களுக்கு எந்தவித தடுப்பூசியும் தேவையில்லை என்றும் பாரம்பரிய சிகிச்சை முறையில் கொரோனாவை குணப்படுத்துவோம் என்று கூறியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உப்புக்கரைசலை குடித்தால் போதும் என்று வேப்பிலை கரைசலை குடித்தால் குணமாகிவிடும் என்றும் கூறியுள்ளது. இந்த சிகிச்சையினால் கொரோனா பாதிப்பு குணமாகும் என்பதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியதை வடகொரியா அரசு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version