தமிழ்நாடு

லவ் ஜிகாத் செய்தால் சிறை தண்டனை.. வட மாநிலங்கள் அதிரடி!

Published

on

வட இந்தியாவில் மத மாற்றுத் திருமணங்களுக்கு எதிர்ப்பு எழுந்து வருகின்றன.

எனவே லவ் ஜிகாத்திற்கு எதிராகச் சட்டம் இயற்ற உள்ளதாக மத்திய பிரதேசம் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே வட மாநிலங்களில் லவ் ஜிகாத்திற்கு எதிராக கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. எதிர்ப்பை ஆதரிக்கும் வகையில் லவ் ஜிகாத்தை கட்டுப்படுத்தக் கடுமையான சட்டங்கள் இயற்றப்படும் என மத்திய பிரதசம் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்து இருந்தார்,

அதை உறுதி செய்யும் வகையில் பேசியுள்ள மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, அடுத்து நடைபெற உள்ள சட்டமன்றக் கூட்டத்தில் லவ் ஜிகாத்தை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்கள் இயற்றப்படும். அதில் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

லவ் ஜிகாத்துக்கு எதிராக மத்திய பிரதேசம் மட்டுமல்லாமல் உத்திர பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, அசாம் உட்படப் பல மாநிலங்கள் சட்டம் இயற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றன.

லவ் ஜிகாத் என்றால் என்ன?

லவ் ஜிஜாத் என்றால், இஸ்லாத்தை பின்பற்றாத ஒருவரை இஸ்லாத்திற்கு மதம் மாற்றம் செய்து நடத்தப்படும் திருமணம் ஆகும். முதலில் கேரளாவில் லவ் ஜிகாத்துக்கு எதிரான சர்ச்சைகள் எழுந்தன. இப்போது இது இந்தியா மூலம் பரவியுள்ளது. பாஜக ஆலும் மாநிலங்கள் லவ் ஜிகாத்தை கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த சர்ச்சையில் அமீர் கான், சல்மான் கான் உள்ளிட்ட பிரபல பாலிவுட் நடிகர்களும் விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version