தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? சென்னை வானிலை ஆய்வு மையம்

Published

on

கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்தது என்பதும் இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்த ஆண்டு தண்ணீர் கஷ்டத்திற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் அதேபோல் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தென்மேற்கு பருவக்காற்று பருவ காலம் முடிவடைந்த நிலையில் விரைவில் வடகிழக்கு பருவக்காற்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 26ஆம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நவம்பர் டிசம்பர் மாதங்களில் சென்னை உள்பட தமிழகத்தில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version