தமிழ்நாடு

தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை: இன்று 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

Published

on

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்தது என்பதும் இதனால் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அக்டோபர் 26 ஆம் தேதி முதல் அதாவது இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என்றும் குறிப்பாக இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்பட்ட ஆகிய 7 தென்மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் அதுமட்டுமின்றி புதுவை காரைக்கால் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென் வங்க கடலின் மத்திய பகுதியில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரங்களில் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் பொதுவாக நகர் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version