இந்தியா

கேரளாவை அச்சுறுத்தும் புதியவகை வைரஸ்: பொதுமக்கள் அதிர்ச்சி!

Published

on

கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் புதிய வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வெளி வந்திருக்கும் தகவலை மாநில மக்களை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்பதும், தற்போது கூட தினமும் சுமார் 7000 பேர் போன்ற கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் சுமார் 50 பேர் பலியாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பில் பாதிக்குமேல் கேரளாவில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கேரளாவில் இன்னும் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வராத நிலையில் தற்போது நோரோ என்ற புதிய வகை வைரஸ் தோன்றி வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ள வயநாடு என்ற பகுதி அருகே 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது என்றும் உயிரையே பறிக்கும் அளவுக்கு கொரோனா வைரஸ் உள்ளது இந்த வைரஸிலிருந்து பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அறிகுறி தெரிந்தால் உடனடியாக பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என கேரள மாநில சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version