இந்தியா

ரூ.200 கோடி மோசடி வழக்கில் திருப்பம்: அமலாகத்துறை சாட்சியாக மாறும் பிரபல நடிகை!

Published

on

பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான 200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் பிரபல நடிகை ஒருவர் அமலாக்கத்துறை தரப்பு சாட்சியாக மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்பட பலரை ஏமாற்றி ரூபாய் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் வேறொரு வழக்கில் சிறையில் இருக்கும் போதே இந்த மோசடியை செய்ததாகவும் சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து சிறையிலேயே ஒரு அலுவலகத்தை அமைத்து மோசடி செய்ததாகவும் கூறப்பட்டது.

சுகேஷ் சந்திரசேகருக்கு நெருக்கமாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா பதேஹி ஆகியோர் இருந்ததாகவும் இவர்கள் இருவருக்கும் சுகேஷ் கோடிக்கணக்கில் மதிப்பிலான பரிசு பொருட்களை அளித்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உடன் ஏற்கனவே அமலாக்கத் துறையினர் விசாரித்து நிலையில் தற்போது நோரா பதேஹியிடமும் அமலாக்கத் துறையினர் விசாரித்ததாகவும், இதனை அடுத்து அவர் அமலாக்கத்துறை தரப்பு சாட்சியாக நோரா பதேஹி மாறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அமலாக்கத்துறை சாட்சியாக நோரா பதேஹி மாறினால் அவருக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பது மட்டுமின்றி சுகேஷ் சந்திரசேகருக்கு உரிய தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version