சினிமா செய்திகள்

லிசாவை தொடர்ந்து 3டியில் உருவாகும் தில்லுக்கு துட்டு 3!

Published

on

அஞ்சலி நடிப்பில் வெளியான லிசா படம் 3டியில் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், படம் பலூன் படத்தைப் போலவே படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், சந்தானத்தின் பேய் படமான தில்லுக்கு துட்டு 3ம் பாகம் 3டியில் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சந்தானத்தின் நண்பர் ராம் பாலா இயக்கத்தில் வெளியான தில்லுக்கு துட்டு மற்றும் அதன் இரண்டாம் பாகம் அமோக வெற்றியை சந்தானத்திற்கு ஈட்டித் தந்தது.

ஏ1, டகால்டி படங்களில் நடித்து வரும் சந்தானம், அடுத்ததாக தனது வெற்றி ஃபார்மூலா படமான தில்லுக்கு துட்டு படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தையும் ராம் பாலாவே இயக்கவுள்ளார்.

சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் டகால்டி படத்தை தயாரித்து வரும் ஆர்.பி.சவுத்ரியே இந்த படத்தையும் தயாரிக்க உள்ளாராம். 2 படங்கள் வெற்றி பெற்று வசூலை ஈட்டித் தந்த நிலையில் மூன்றாவது படத்தை 3டியில் எடுக்கும் முயற்சியையும் ஆலோசித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version