தமிழ்நாடு

தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேசன் பொருட்கள் கிடையாது: அதிரடி அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி!

Published

on

தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் அதிரடியாக அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தடுப்பூசி மெகா மையம் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கானவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருந்தும் இன்னும் லட்சக்கணக்கானோர் முதல் டோஸ் தடுப்பு ஊசி கூட போடாமல் உள்ளனர் என்பதும் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஒரு சில அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு அவர்கள் பிறப்பித்த உத்தரவில் இன்னும் 4 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஒரு டோஸ் தடுப்பு ஊசி கூட போடவில்லை என்றும் தடுப்பூசி போடாதவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வது தடை செய்யப்படும் என்றும் குறிப்பாக ரேஷன் ரேஷன் கடைகளுக்கு செல்ல அவர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வியாபார நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட், திரையரங்குகள், ஆகியவற்றிலும் தடுப்பூசி போடாதவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் திருமண மண்டபங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், துணிக்கடைகள், தங்கும் விடுதிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளி கல்லூரிகள், வங்கிகளுக்கு செல்லவும் தடுப்பூசி போடாதவர்களுக்கு அனுமதி இல்லை என ஆட்சியர் ஜெயச்சந்திர பானு தெரிவித்தனர்.

அதேபோல் விளையாட்டு மைதானங்கள், டீ கடைகள், ஓட்டல்கள், கடைவீதிகள் உள்பட பொது இடங்களுக்கு செல்வதற்கு தடுப்பூசி போடாதவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் என்றும் தடையை மீறி தடுப்பூசி போடாதவர்கள் சென்றால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

seithichurul

Trending

Exit mobile version