வணிகம்

மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைந்தது.. மானிய விலை சிலிண்டர் விலை என்ன?

Published

on

ஜூலை மாதம் மானியமில்லா சிலிண்டர் விலை 100 ரூபாய்க்கும் அதிகமாகக் குறைந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சாதகமான சூழலால் எரிவாயு சிலிண்டர்கள் விலை குறைந்துள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் மானிய விலை சிலிண்டர்கள் விலையில் பெரிய மாற்றங்கள் இல்லை.

ஜூன் மாதம் சென்னையில் மானிய விலை சிலிண்டர் விலை 485.25 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஜூலை மாதம் மூன்று ரூபாய் குறைந்து 494.35 ரூபாயாக உள்ளது.

சென்னையில் மானியமில்லா சிலிண்டர் விலை 100 ரூபாய் 50 பைசா குறைந்து 652.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

19 கிலோ சிலிண்டர் விலை 1249 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் மாற்றி அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version