தமிழ்நாடு

கெஞ்சி கேட்டுக்கிறேன், ஜெயில்லகூட போடுங்க வீட்டுக்கு மட்டும் சீல் வைக்காதீங்க: மதுவந்தியின் வீடியோ வைரல்

Published

on

பாஜக செயற்குழு உறுப்பினரும் காமெடி நடிகர் ஒய்ஜி மகேந்திரனின் மகளுமான மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுவந்தி சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் இந்த வீடு வாங்குவதற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு இந்துஸ்தான் பைனான்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

கடன் மூலம் வீட்டை வாங்கிய மதுவந்தி வாங்கிய கடனுக்கு சில தவணைகள் மட்டும் வட்டி கட்டியுள்ளார். அதன்பின்னர் வட்டி, அசல் கட்டுவதை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. வட்டி பணத்தை கட்டச் சொல்லி பைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் பல மாதங்களாக வலியுறுத்தியும் பணம் செலுத்தாமல் மதுவந்தி இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் நடவடிக்கை எடுக்க முடிவு எடுத்த நிதி நிறுவன அதிகாரிகள் வட்டியும் சேர்த்து ஒரு கோடியே 20 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கட்டுமாறு மதுவந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நிதி நிறுவனத்தின் நோட்டீசுக்கு எந்த பதிலும் சொல்லாமல் மதுவந்தி காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நீதிமன்றத்தில் இந்துஜா பைனான்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மதுவந்தியின் வீட்டிற்கு சீல்வைத்து விட்டுச்சாவியை பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் கமிஷனர் வினோத்குமார் முன்னிலையில் மத்தியில் மதுவந்தியின் வீடு போலீசார் பாதுகாப்பில் சீல் வைக்கப்பட்டு பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மதுவந்தியின் வீடு சீல் வைக்கப்பட்ட விவகாரம் குறித்த வீடியோ சீல் வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version