தமிழ்நாடு

பாஜக இல்லாத முதல்வர்கள் மாநாடு: முக ஸ்டாலினுக்கு திடீர் நெருக்கடி!

Published

on

பாஜக இல்லாத முதல்வர்கள் மாநாட்டை கூட்டவேண்டும் என்று ஐடியா கொடுத்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு தற்போது திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அகில இந்திய அளவில் பாஜக வை எதிர்ப்பதற்காக ஒரு வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் இதனால் பாஜக இல்லாத முதல்வர்கள் மாநாடு கூட்ட வேண்டும் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆலோசனையை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏற்றுக்கொண்டார். அதேபோல் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் ஜார்கண்ட் முதலமைச்சர் தேமல் சோரன்ஆகியோர்களும் ஏற்றுக்கொண்டனர் அதேபோல் முன்னாள் பிரதமர் தேவகவுடா இந்த அணியில் சேர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாஜக அல்லாத முதல்வர்கள் மாநாடு என்றாலும் காங்கிரஸ் முதல்வர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத ஒரு புதிய கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் தலைவர்கள் கூறிவருகின்றனர் .

ஆனால் காங்கிரசோடு மிகவும் நெருக்கமாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் நிலையில் காங்கிரஸை எதிர்த்து இப்படி ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வாரா? காங்கிரஸ் பாஜக இல்லாத ஒரு கூட்டணியை உருவாக்க அவர் முயற்சி செய்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

seithichurul

Trending

Exit mobile version