தமிழ்நாடு

வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்: அதிகளவில் வேட்புமனு தாக்கலாகும் என எதிர்பார்ப்பு

Published

on

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இன்று கடைசி நாள் என்பதால் இன்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று கடைசி நாள் என்பதால் அதிக அளவில் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாகவும் குறிப்பாக அரசியல் கட்சி வேட்பாளர்கள் அதிக அளவில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று வேட்புமனு தாக்கல் முடிந்தவுடன் நாளை வேட்பு மனு மீதான பரிசீலனை நடைபெறும் என்றும் பிப்ரவரி 7ஆம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தீவிரவாதி 7ஆம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version