தமிழ்நாடு

நாளை முதல் வேட்புமனு தாக்கல் ஆரம்பம்: சுறுசுறுப்பாகிறது தேர்தல்!

Published

on

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி தேர்தல் பிரசாரங்கள், கூட்டணி தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு ஆகியவற்றைக் கவனித்து வருகின்றன.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் புதுவையில் உள்ள 30 தொகுதிகளிலும் கேரளாவில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதை அடுத்து நாளை முதல் இந்த மூன்று மாநிலங்களிலும் வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது.

நாளை முதல் மார்ச் 19 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 20ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும் மனுக்களை திரும்பப் பெற 22ஆம் தேதி கடைசி தினம் என்றும், 22 ஆம் தேதி மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குவதை அடுத்து இன்றுக்குள் திமுக உள்பட அனைத்து கட்சிகளையும் வேட்பாளர் பட்டியல் வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version