விமர்சனம்

Nomadland – விமர்சனம் #Oscar_2020

Published

on

2020-ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருது வாங்கின படங்களின் அறிமுகத்தை கதையை இங்கு தெரிந்துகொள்ளலாம்…

தன் கணவர் இறந்த உடன் தன்னிடம் இருக்கும் எல்லாத்தையும் விற்றுவிட்டு ஒரு வண்டியை வாங்கி அப்படியே பயணம் செய்கிறார். அந்த நாடோடி பயணத்தில் தான் சந்திக்கும் மனிதர்கள், சுழல்களுடன் அன்பு கொள்கிறார் பென் என்ற 60 வயது பெண். இறுதியில் அந்த முதிய பெண்ணுக்கு அந்தப் பயணம் என்ன தந்தது என்பதை சொல்லியிருக்கும் படம் தான் நோமண்ட் லேண்டு.

2020-ஆம் அண்டிற்காக மூன்று விருதுகளைப் பெற்றுத்தந்திருக்கிறது. படம் தொடங்கியது முதல் ஒரு சைலண்ட். சின்ன சின்ன கேரக்டர்கள் அறிமுகம். அவர்களின் வாழ்க்கை என பலரது வாழ்வியலைப் படம் நெடுக்க காட்டிச் செல்கிறார் இயக்குநர். பென்னாக பிரன்செஸ் மெக்டொர்மெண்ட் நடித்திருக்கிறார். ஒரு மென் சோகத்தோடு படம் நெடுக தன்னுடைய வேனில் பயணம் செய்கிறார். கிடைக்கிற வேலைகளை, கிடக்கும் இடங்களில் வாழ்கிறார். இவருக்கும் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் கிடைத்திருக்கிறது. இதுக்கு முன் மூன்று முறை ஆஸ்கார் வாங்கியிருக்கிறார். இதிலும் தேவையான நடிப்பையே கொடுத்திருக்கிறார்.

படத்தில் இசை, ஒளிப்பதிவு என எல்லாம் தேவையான அளவில் தான் இருக்கிறது. நம் வாழ்க்கையில் சந்திக்கும் எந்த மனிதருக்கும் அவர்கள் நம்மை விட்டு சென்ற பின்னர் கூட அவரது நினைவுகள் நம் உடன் தான் இருக்கும். நமக்கு பிடித்தவர் இறந்தாலோ, நமக்கு பிடித்தவர் நம்மை விட்டு போனாலோ யாராவது ஒருவரது வகையில் அவரை நாம் வேறு ஒருவர் வடிவில் சந்திப்போம். இவர் என் அப்பா மாதிரி, என் கல்லூரி நண்பன் மாதிரி என யாரோ ஒருவருக்கு மற்றோருவரை மாற்றாக நாம் கண்டுபிடித்து வருவோம். அதுதான் வாழ்க்கை. அதைத்தான் இந்தப்படமும் சொல்கிறது.

படம் ரோம்ப ஸ்லோ. விருது கொடுக்கும் படங்கள் எல்லாம் இப்படிதானா. இதைவிட நல்ல கருத்தை நல்ல படங்கள் ஏதும் வரவில்லையா. என்ற கேள்வியை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறோம். எப்போதுதான் விடை கிடைக்குமோ. மிகப்பெரிய பொறுமைசாளியாக நீங்கள் இருந்து இந்த உலக வாழ்வை உணர நினைத்தால் இந்தப் படத்தை ஒருமுறை பார்த்துவிடுகிகள். மற்றபடி பெரிதாக இந்தப் படத்தில் ஏதும் இல்லை. மூன்று ஆஸ்கார் வாங்கிய படம் என்பதைத் தவிர இதில் பார்க்கவும் எதுவும் இல்லை. அடுத்த ஆஸ்கார் படத்தில் சந்திப்போம்.

seithichurul

Trending

Exit mobile version