தொழில்நுட்பம்

நோக்கியாவின் 5ஜி ஸ்மார்ட்போன்: X30 5G மாடலின் சிறப்பு அம்சங்கள்..!

Published

on

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் மொபைல் போன் என்றாலே அனைவருக்கும் நோக்கியா போன் தான் ஞாபகம் வரும் என்பதும் அந்த வகையில் கடந்து சில ஆண்டுகளாக மொபைல் போன் உற்பத்தியில் பின்தங்கி இருந்த நோக்கியா தற்போது மீண்டும் புது புது மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் தற்போது நோக்கியா X30 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்த நிலையில் இந்த போனின் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை என்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

இன்று அறிமுகமாகியுள்ள நோக்கியா X30 5G குறித்து இந்திய துணைத் தலைவர் சன்மீத் சிங் கோச்சார் கூறியபோது, ‘சுற்றுச்சூழலுக்கு உகந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் எங்களுடைய ஒவ்வொரு சாதனத்திலும் அதிக நம்பகத்தன்மையை நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு தருவோம்’ என்று கூறியுள்ளார். புதிய ஸ்மார்ட்போன் க்ளவுடி ப்ளூ அல்லது ஐஸ் ஒயிட் வண்ணங்களில் 8/256 ஜிபி மெமரி/ஸ்டோரேஜ் ரூ.48,999 என்ற விலையில் முன்பதிவு செய்யப்படுகிறது.

Nokia X30 5G கிளவுடி ப்ளூ மற்றும் ஐஸ் ஒயிட் மாடல்களை வாடிக்கையாளர்கள் இன்று முதல் மொபைலை முன்கூட்டிய ஆர்டர் செய்யலாம். மேலும் இந்த மாடல் பிப்ரவரி 20, 2023 முதல் அமேசான் மற்றும் நோக்கியா இணையதளத்திலும் கிடைக்கும்

நோக்கியா X30 5G ஸ்மார்ட்போன்: என்னென்ன சிறப்பு அம்சங்கள்..!

X30 5G மாடல் போன் 16MP முன் செல்ஃபி கேமராவை கொண்டது.

இதில் 5G இன் திறனை மேம்படுத்த Qualcomm Snapdragon 695 செயலி பொருத்தப்பட்டுள்ளது.

50 எம்பி ப்யூர்வியூ கேமரா மற்றும் 13 எம்பி அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது

இது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (ஓஐஎஸ்) ஆகிய வசதிகளை கொண்டது.

Trending

Exit mobile version