இந்தியா

3 நாட்களுக்கு சார்ஜ் செய்ய வேண்டாம்.. நோக்கியா அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட்போன்!

Published

on

பொதுவாக ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனை என்னவெனில் சார்ஜ் சீக்கிரம் காலியாகிவிடும் என்பதுதான். ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே நிற்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட் போன்களால் பலர் சார்ஜரை கையில் வைத்துக் கொண்டே செல்லும் நிலை ஏற்படும்.

ரெட்மி போன்ற ஒரு சில மாடல்களில் எவ்வளவு பயன்படுத்தினாலும் ஒரு நாள் முழுவதும் சார்ஜ் இருக்கும் வகையிலான பேட்டரிகள் இருப்பது என்பது தெரிந்ததே. இருப்பினும் இன்னும் பல மாடல்களில் ஒரு சில மணி நேரங்களில் சார்ஜ் காலியாகும் நிலை தான் உள்ளது என்பதால் பயனாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் நோக்கியா நிறுவனம் நேற்று புதிய மாடல் ஸ்மார்ட்போன் ஒன்றை இந்தியாவில் அறிமுகப்படுத்திய நிலையில் இந்த ஸ்மார்ட்போனில் ஒருமுறை சார்ஜ் செய்தால் மூன்று நாட்களுக்கு மீண்டும் சார்ஜ் செய்ய தேவையில்லை என்று கூறப்படுகிறது. இந்த போனில் முழு விபரங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

நோக்கியா அறிமுகம் செய்திருக்கும் புதிய ஸ்மார்ட்போன் Nokia X10, Nokia X20. இதன் சிறப்பம்சங்கள் இதோ:

ஆண்ட்ராய்டு 13

டூயல் சிம்

20:9 விகிதத்துடன் 6.74 இன்ச் எச்டி+ (720×1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளே

4ஜிபி ரேம்

13 மெகாபிக்சல் முதன்மை கேமிரா 2

5 மெகாபிக்சல் செல்ஃபி கேமிரா

128ஜிபி ஸ்டோரேஜ்

32ஜிபி வரை எஸ்டி கார்டு

5,050mAh பேட்டரி. இதன் மூலம் ஒருமுறை சார்ஜ் செய்தால் மூன்று நாட்கள் வரை பேட்டரி நிற்கும்

இந்தியாவில் நோக்கியா C31 ஸ்மார்ட்போன் விலை 3 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ. 9,999. அதேபோல் 4ஜிபி + 64ஜிபி மாடலின் விலை ரூ. 10,999.

seithichurul

Trending

Exit mobile version