தொழில்நுட்பம்

நோக்கியா 8110 “பனானா போன்” விற்பனை துவக்கம்.!

Published

on

எச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தனது புதிய மாடல் நோக்கியா 8110 4ஜி பியூச்சர் போன்னின் விற்பனையை இன்று நோக்கியா இ-ஸ்டோர் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் துவங்கியுள்ளது. நோக்கியா 8110 “பனானா போன்” என்றும் அழைக்கப்படுகிறது. புதிய நோக்கியா 8110 மொபைலில், 2.4′ இன்ச் QVGA வளைந்த டிஸ்பிளே, இன்ட்யூட்டிவ் டேக்டைல் மெக்கானிக்ஸ் உடன் விற்பனைக்கு வந்துள்ளது.

நோக்கியா 8110 இல் வழங்கப்பட்டுள்ள ஸ்லைடரை பயன்படுத்தி அழைப்புகளை ஏற்கவும், நிராகரிக்கும் முடியும்.

நோக்கியா 8110 4ஜி மொபைலில் 1.1 ஜிகாஹெர்ட்ஸ் கொண்ட டூயல்- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 205 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

கூடுதலாக இந்த புதிய நோக்கியா மொபைல் இல் பேஸ்புக், டிவிட்டர், கூகுள் அசிஸ்டன்ட், கூகுள் சர்ச், கூகுள் மேப்ஸ் மற்றும் வாட்ஸ் ஆப் போன்ற செயலிகளின் சேவைகள் இணைக்கப்பட்டுள்ளது. நோக்கியாவின், இன்னொரு அடையாளமான “ஸ்னேக் கேம்” புது பொலிவுடன் இந்த மொபைலில் களமிறங்கியுள்ளது.

இந்த நோக்கியா 8110 “பனானா போன்” பிளாக் மற்றும் எல்லோ நிறத்தில் வெறும் ரூ.5,999க்கு விரிப்பை செய்யப்படுகிறது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version