இந்தியா

வொர்க் ப்ரம் ஹோம் முறையால் தொழில்துறையே கெட்டு போயுள்ளது: விப்ரோ தலைவர் ஆவேசம்..!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்திலும் சரி, அதன் பின்னும் சரி பல நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் என்ற வீட்டிலிருந்து வேலை செய்யும் நிலையை கடைபிடித்து வருகின்றன என்றும் இன்னும் பல நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் நிலையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஒரு பல நிறுவனங்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என ஊழியர்களை கட்டாயப்படுத்திய போதிலும் இன்னும் சில நிறுவனங்களில் பாதி நாட்கள் வீட்டிலும் பாதி நாட்கள் அலுவலகத்தில் வந்து வேலை செய்யும் முறையையும் முழுமையாக வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையையும் கடைபிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டில் இருந்து வேலை செய்வது என்பது ஊழியர்களுக்கு பெரும் வசதியாக இருக்கிறது என்றும் டிராபிக் பிரச்சனை காரணமாக பல மணி நேரங்கள் வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் அந்த நேரம் மற்றும் போக்குவரத்துக்கான செலவு மிச்சப்படுகிறது என்றும் மன அழுத்தம் குறைகிறது என்றும் ஊழியர்களின் சார்பில் கூறப்படும் காரணங்களாக உள்ளன.

ஆனால் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என விப்ரோ தலைவர் ரிஷாத் பிரேம்ஜி அவர்கள் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் மனநிலையிலிருந்து அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். வீட்டில் இருந்து வேலை செய்யும் கலாச்சாரம் என்பது ஊழியர்களுக்கு நெகிழ்வு தன்மையை கொடுக்கும் என்பதை அவர் ஒப்புக்கொண்டாலும் அலுவலகத்திற்கு வர தொடங்கினால் தான் உற்பத்தி திறன் அதிகரிக்கும் என்றும் நிறுவனம் மேம்படுத்தப்படும் என்றும் குழுவாக இருந்து பணி செய்வதற்கு உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகும் வாரத்தில் சில நாட்கள் அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளன என்றும் இது முழுமையாக அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யும் முறையாக மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை தொடர்வதால் தொழில் துறையே கெட்டுப் போய் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் ஒரு நண்பரை தேடி அவருடன் நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும் நேரடியாக ஒரு நண்பரிடம் பழகுவதற்கு அதிக வித்தியாசம் இருக்கிறது என்று கூறிய பிரேம்ஜி கிட்டத்தட்ட வொர்க் ப்ரம் ஹோம் மற்றும் அலுவலகம் வந்து பணி செய்வது இதற்கு சமமானதாகும் என்றும் மக்கள் அலுவலகத்திற்கு வந்து ஒருவருடன் ஒருவர் இணைந்து பணிபுரிவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

விப்ரோ நிறுவனத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து வாரத்திற்கு மூன்று நாள் வீட்டில் இருந்து பணி செய்யும் முறை அமல்படுத்தப்படும் என்று ஊழியர்களை கேட்டுக் கொண்டது. இதன் காரணமாக ஊழியர்களுக்கு நெகிழ்வுத்தன்மை இருந்தாலும் தற்போது முழுமையாக அலுவலகம் வந்து பணி செய்ய வேண்டும் என விப்ரோ நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version