இந்தியா

இளைஞர்கள் இந்த கலாச்சாரத்தில் ஈடுபடக்கூடாது.. மூன்லைட்டிங் குறித்து இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி..!

Published

on

வீட்டில் இருந்து பணி செய்யும் வொர்க் ப்ரம் ஹோம் மற்றும் மூன்லைட்டிங் ஆகிய கலாச்சாரத்தில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது என இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் பல ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி செய்யும் வொர்க் ப்ரம் ஹோம் என்ற முறையை கடைபிடித்து வருகின்றனர் என்பதும் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு முடிவடைந்து இயல்புநிலை திரும்பினாலும் கூட பலர் அலுவலகம் வந்து வேலை செய்ய மறுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 3 நாட்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் முறை இரண்டு நாட்கள் அலுவலகம் வந்து பணிபுரியும் முறை பல அலுவலகங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றும் முழுமையாக அலுவலகம் வந்து பணிபுரிபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

இதற்கு அலுவலகத்திற்கு செல்லும் நேரம் மிச்சம் உள்பட பல்வேறு வசதிகள் இருந்தாலும் பலர் மூன்லைட்டிங் என்று கூறப்படும் ஒரே நேரத்தில் இரண்டு அலுவலகங்களில் வேலை செய்யும் முறையை கடைப்பிடித்து வருவதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்து பணி செய்யும்போது இரண்டு நிறுவனங்களில் பணி செய்து இரண்டு நிறுவனங்களிடம் இருந்து இரண்டு சம்பளம் பெறுவது என்பது எளிதாக இருப்பதாக பல ஊழியர்கள் நினைப்பதால் இந்த மூன்லைட்டிங் என்ற முறையை எடுக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி அவர்கள் வீட்டில் இருந்து பணி செய்வது மற்றும் மூன்லைட்டிங் ஆகியவற்றிற்கு எதிராக இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் வெளியேறவுத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த ஆசிய பொருளாதார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் வீட்டில் இருந்து வேலை செய்வதை இளைஞர்கள் தேர்வு செய்ய வேண்டாம் என்றும், மூன்லைட்டிங் முறையை கடைபிடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இளைஞர்கள் மூன்லைட்டிங் முறையில் ஈடுபடக்கூடாது என்றும் அவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் கலாச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்றும் அலுவலகம் வந்து வேலை செய்தால் தான் அவர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்போசிஸ் நிறுவனத்தை பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்து மூன்லைட்டிங் மற்றும் வொர்க் ப்ரம் ஹோம் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்றும் இளைய தலைமுறையினர் அலுவலகம் வந்து வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இளைஞர்களுக்கு தற்போது தீராத ஆசை இருப்பதால் மூன்லைட்டிங் என்ற வலையில் விழுந்து விடுகிறார்கள் என்றும் பின்னால் அது அவர்களுக்கு பெரிய சோகமாக அமையும் என்றும் அலுவலகம் வந்து வேலை செய்தால் மட்டுமே நல்ல அனுபவங்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு தேவை நேர்மையான கலாச்சாரம் என்றும் அதில் பாரபட்சமில்லை என்றும் நாடு முன்னேற விரைவான முடிவு எடுப்பது மற்றும் தொந்தரவு இல்லாத பரிவர்த்தனைகள் தேவை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். விரைவாக முடிவெடுப்பது, விரைவாக செயல்படுத்துவது, தொந்தரவு இல்லாத பரிவர்த்தனை, பரிவர்த்தனைகளில் நேர்மை, விருப்பு வெறுப்பு இல்லாத கலாச்சாரத்தை நாம் உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். நாட்டில் கடினமாக உழைப்பவர்கள், நேர்மையாக பணியாற்றுபவர்கள் நல்ல ஒழுக்கம் கொண்டவர்கள் ஒரு சிலர் மட்டுமே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Trending

Exit mobile version