தமிழ்நாடு

சென்னைக்கு ஒரு வருடத்திற்கு தேவையான தண்ணீர் இருக்கின்றது: அமைச்சர் தகவல்

Published

on

சென்னை மக்களுக்கு ஒரு வருடத்திற்கு தேவையான குடிதண்ணீர் கையிருப்பு இருப்பதாக அமைச்சர் கேஎன் நேரு அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் சென்னையை சுற்றியுள்ள அனைத்து நீர்நிலைகளும் கிட்டத்தட்ட நிரம்பி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்த ஆண்டு சென்னைக்கு தண்ணீர் தட்டுப்பாடு வராது என ஏற்கனவே மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னைக்கு ஒரு வருடத்திற்கு தேவையான தண்ணீர் இருப்பதாக அமைச்சர் கேஎன் நேரு அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக தினமும் ஆயிரம் மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் கே என் நேரு அவர்கள் தெரிவித்தார்.

மேலும் பருவ காலத்தில் சாலைகளில் தண்ணீர் தேங்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறிய அமைச்சர் கே என் நேரு அவர்கள், மழை நீர் தேங்காதவாறு கண்காணிக்க வார்டு வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

ஒவ்வொரு வருடமும் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு வந்து பொதுமக்களை திண்டாட வைக்கும் நிலையில் இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று அமைச்சர் கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வடகிழக்கு பருவ மழையும் வரும் அக்டோபர் 26 ஆம் தேதி தொடங்க உள்ளதை அடுத்து சென்னை நீர்நிலைகளில் மேலும் தண்ணீர் தேங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version