இந்தியா

மூன்றாவதாகப் பிறந்த குழந்தைக்கு வாக்குரிமையை வழங்கக் கூடாது: பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து!

Published

on

இந்தியாவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, மூன்றாவதாக பிறந்த குழந்தைக்கு வாக்குரிமையை வழங்கக் கூடாது என யோகா குரு பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த யோகா குருவும் பதஞ்சலி நிறுவனத்தின் தலைவருமான பாபா ராம்தேவ், அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் மக்கள்தொகை 150 கோடிக்கு மேல் அதிகரிக்கக் கூடாது என்றார். மேலும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த ஒரே வழி, மூன்றாவதாகப் பிறக்கும் குழந்தைக்கு வாக்குரிமை வழங்கப்படக் கூடாது.

அரசு வழங்கும் எந்தவொரு நலத்திட்டமும் கிடைக்காதவாறு சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களானாலும் சரி, இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தால் யாரும் நிறைய குழந்தைகளைப் பெற மாட்டார்கள் என்றார் பாபா ராம்தேவ். இவரின் இந்த கருத்து தற்போது கவனத்தை ஈர்த்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version