தமிழ்நாடு

சென்னையில் நேற்று தொடங்கிய தடுப்பூசி இன்று நிறுத்தம்: என்ன காரணம்?

Published

on

சென்னையில் கடந்த 3 நாட்களுக்கு பின்னர் நேற்று தடுப்பூசி முகாம் தொடங்கியதாக சென்னை மாநகராட்சி அறிவித்த நிலையில் இன்று மீண்டும் தடுப்பூசி முகாம் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து தடுப்பு ஊசியை செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் பலரும் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசியும் செலுத்தி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் தினந்தோறும் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 3 நாட்களாக தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக முகாம் செயல்படாமல் இருந்த நிலையில் நேற்று மீண்டும் சென்னையில் தடுப்பூசி முகாம் செயல்பட்டது. இதனையடுத்து நேற்று பெரும்பாலான சென்னைவாசிகள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

இந்த நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இன்று தடுப்பு ஊசி முகாம் செயல்படாது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று தடுப்பூசி பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று முகாம் நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு தொடர்ச்சியாக அனுப்ப வேண்டும் என்றும் அப்படி அனுப்பினால் தான் தடுப்பூசி முகாம்கள் தினசரி செயல்படும் நிலை ஏற்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Trending

Exit mobile version