தமிழ்நாடு

புத்தாண்டு கோயில் வழிபாடுகளுக்கு நேரக் கட்டுப்பாடுகள் கிடையாது!

Published

on

தமிழகத்தில் உள்ள கோயில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகளுக்காக நேரக் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்பட வில்லை.

நாளை புத்தாண்டு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படும். கோயில், தேவாலயங்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள், வழிபாடுகள் மேற்கொள்ளப்படும். கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் பல புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கோயில் உட்பட வழிபாட்டுத் தலங்களில் புத்தாண்டு வழிபாடுகளை மக்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்த கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளுடன் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அதே நேரத்தில் எவ்வித நேரக் கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை என்பதையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. கோயில், தேவாலயங்களில் பின்பற்றப்படும் வழிபாட்டு நேரங்களின் அடிப்படையில் மக்கள் வழிபாடுகளுக்குச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றபடி, பொது கொண்டாட்டம், பீச் கொண்டாட்டம், அதிகம் பேர் கூடுதல் ஆகியவற்றுக்கு கண்டிப்பாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்த வரையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. பல முக்கிய சாலைகள், பாலங்கள் தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version