தமிழ்நாடு

மும்மொழி கொள்கைக்கு மாறிவிட்டதா தமிழக அரசு: பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

Published

on

கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டுமே கடைபிடிக்கப்படுகிறது என்பதும் தமிழ் ஆங்கிலம் மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிகளில் மொழிகளாகக் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் இந்தி என்ற மூன்றாவது மொழியாக இருக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும் தமிழகம் தொடர்ந்து இருமொழிக் கொள்கையை மட்டுமே கடைபிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் இன்று ஒரு சில செய்தித் தாள்களில் தமிழக பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை கடைபிடிக்க தொடங்கி விட்டது என செய்திகள் வெளியானது. இந்தச் செய்தியை தமிழக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிப்பதாக வெளி வந்துள்ள செய்தியில் உண்மை இல்லை என்றும் தமிழகத்தில் எப்போதும் இருமொழி கொள்கை மட்டுமே கடைபிடிக்கப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.தமிழக பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பயன்படுத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Trending

Exit mobile version