தமிழ்நாடு

டிரைவிங் லைசென்ஸ் எடுக்க இனிமேல் டெஸ்ட் கிடையாது: வருகிறது புதிய விதிமுறை!

Published

on

டிரைவிங் லைசென்ஸ் எடுக்க இனிமேல் டிரைவிங் டெஸ்ட் கிடையாது என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் அவர்கள் முறையான ஓட்டுனர் பயிற்சி மையங்களில் ஓட்டுனர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ’மக்களுக்கு தரமான ஓட்டுனர் பயிற்சி அளிக்க வேண்டும் என்ற காரணத்தினால் ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு இருக்க வேண்டிய வசதிகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்கள் ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும்போது டிரைவிங் டெஸ்ட்டில் கலந்து கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பயிலாமல் தானாகவே டிரைவிங் லைசென்ஸ் எடுக்க வருபவர்களுக்கு மட்டுமே டிரைவிங் டெஸ்ட் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கை காரணமாக ஓட்டுநர் பயிற்சி பள்ளி மூலம் தரமான ஓட்டுநர்கள் உருவாகும் நிலை ஏற்படும் என்றும் அதனால் விபத்துகள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய அறிவிப்பு குறித்து பொதுமக்களிடம் இருந்து ஆலோசனை பெறவும் முடிவு செய்து இருப்பதாக கூறியுள்ள சாலை போக்குவரத்து துறை அமைச்சகம், சம்பந்தப்பட்ட இணையதளத்தில் பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை கூறலாம் என்றும் அறிவித்துள்ளது

author avatar
seithichurul

Trending

Exit mobile version