தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை முதல் புறநகர் ரயில்களில் பயணிகளுக்கு அனுமதியில்லை!

Published

on

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாளை முதல் 20 ஆம் தேதி வரை கடும் கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் மளிகளை கடைகள் மதியம் 12 மணி வரை இயங்கவும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இப்படியான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நாளை முதல் வரும் 20 ஆம் தேதி வரை புறநகர் ரயில்களில் பொது மக்கள் பயணம் செய்ய அனுமதியில்லை என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் செங்கல்பட்டு வழித் தடத்திலிருந்து சென்னைச் செல்பவர்களும், குமிடிப்பூண்டி தடத்திலிருந்து செல்பவர்களும் அதிகம் பதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

நாளை முதல் தேநீர் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டும் தான் இயங்க முடியும். அதேபோல மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6 மணி முதல் 12 மணி வரையே இயங்கும்.

இறுதி ஊர்வலம், அதைச் சார்ந்த சடங்குகளில் இனி 25 பேருக்கு பதில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படும். அதேபோல திருமண விழாக்களில் 50 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி.

 

seithichurul

Trending

Exit mobile version