இந்தியா

இனி செட்-ஆப் பாக்ஸ் தனியாக தேவையில்லை: மத்திய அரசு புதிய உத்தரவு

Published

on

தற்போது தொலைக்காட்சிகளில் செட்டாப் பாக்ஸ் என்பது தனியாக பொருத்தப்பட்டு வரும் நிலையில் இனி தயாரிக்கப்படும் டிவிக்களில் செட்டாப் பாக்ஸ் உருவாக்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கேபிள் மூலம் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை பொதுமக்கள் பார்த்து வந்த நிலையில் சமீபகாலமாக செட்டாப்பாக்ஸ் என்பது பரவி வருகிறது.

ஒவ்வொரு நிறுவனமும் ஒரு செட் டாப் பாக்ஸ் வைத்து உள்ளது என்பதும் அந்த செட்டாப் பாக்ஸ் மூலம் குறிப்பிட்ட தொகையை பணம் கட்டினால் அதன் மூலம் குறிப்பிட்ட சேனல்களை பார்த்துக்கொள்ளலாம் என்பது தெரிந்ததே. மேலும் தமிழக அரசே செட்டாப் பாக்ஸ் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாம் கட்டண சேனல்கள் வேண்டுமென்றால் நாம் கூடுதல் தொகையை செலுத்தி கொள்ளலாம்.

இந்த நிலையில் தற்போது ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் இனிமேல் செட்டாப் பாக்ஸ் இணைந்து வர வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இலவச மற்றும் கட்டண தொலைக்காட்சி சேனல்களை காண இனிமேல் தனியாக செட்டாப் பாக்ஸ் பொருத்த வேண்டிய அவசியம் இருக்காது என்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செட்டாப் பாக்ஸ் பொருத்தப்பட்ட டிவிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் இனி வரும் தொலைக்காட்சிகளில் தனியாக செட்டாப்பாக்ஸ் மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பெல்லாம் டிவியை இன்டர்நெட்டை வைஃபை மூலம் இணைக்க வேண்டுமென்றால் அதற்காக ஒரு டிவைஸ் வாங்க வேண்டும். ஆனால் தற்போது அனைத்து டிவிகளில் இன்டர்நெட் இணைப்பிற்கான வசதி டிவியிலேயே உள்ளது என்பது தெரிந்ததே. அதேபோல்தான் இனிவரும் தொலைக்காட்சிகளில் செட்டாப் பாக்ஸ் பொருத்தப்பட்டு வரும் என்பதால் தனியாக செட்டாப் பாக்ஸ் என செலவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

இலவச, கட்டண தொலைக்காட்சி சேனல்களை செட்டாப் பாக்ஸ் பயன்படுத்தாமல் பார்க்கும் வகையில் தொலைக்காட்சி பெட்டிகளை உருவாக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை கிட்டதட்ட அனைத்து தொலைக்காட்சி தயாரிக்கும் நிறுவனங்களும் ஏற்றுக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேபோல் செல்போன், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட அனைத்து கருவிகளுக்கும் ஒரே மாதிரியான யூஎஸ்பி டைப் சார்ஜரை உருவாக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் வெவ்வேறு சாதனங்களுக்கு பயன்படுத்தப்படும் சார்ஜர்களால் மின்கழிவு அதிகரிப்பை குறைக்கும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version