தமிழ்நாடு

கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லை: எடப்பாடி பழனிசாமி

Published

on

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழக ஆளுநர் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இன்று பெண் காவலர் ஒருவரின் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் தமிழகத்தில் பாதுகாப்பில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: காவலர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள புதிய உத்திகளை கையாளுவதற்கு பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்றும் பயிற்சி தருவதற்கு கமிட்டி போட்டு நேரத்தை வீணாக்காமல் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் .

திருநெல்வேலி பழவூரில் ஊரில் பெண் எஸ்ஐ மீது தாக்குதல் நடத்தியவர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கவர்னர் முதல் காவலர் வரை தமிழ் நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.ஐயை தொலைபேசியில் அழைத்து பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பெண் காவலரின் உயர் சிகிச்சைக்கு அறிவுறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

 

Trending

Exit mobile version