இந்தியா

இஸ்லாமியர்களுக்குத் தேர்தலில் சீட் கிடையாது.. பாஜக அமைச்சரால் வெடித்த சர்ச்சை!

Published

on

இஸ்லாமியர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடையாது என்று கர்நாடகாவில் மாநில அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது அமைச்சரவையில் அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத்து அமைச்சராக ஈஸ்வரப்பா என்பவர் உள்ளார்.

கர்நாடகாவில் பெல்காவி லோக்சபா தொகுதி காலியாக உள்ளது. அந்த தொகுதிக்கான இடைத்தேர்தலில் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் ஈஸ்வரப்பா, எந்த சமூகத்தைச் சார்ந்த பிரிவினருக்குத் தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்தாலும், இஸ்லாமியர் வேட்பாளருக்கு சீட் வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.

இது இந்துத்துவா மையங்கள் உள்ள தொகுதி. எனவே இஸ்லாமியர்களுக்கு சீட் வழங்கப்படாது என்று அமைச்சர் ஒருவர் பகிரங்கமாகக் கூறியிருப்பது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

seithichurul

Trending

Exit mobile version