Connect with us

இந்தியா

இந்து கோவில்கள் அருகே மாட்டிறைச்சி விற்க தடை: அதிரடி உத்தரவு!

Published

on

இந்து கோயில்கள் இருக்கும் இடத்தில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மாடுகளை இறைச்சிக்காக கொல்வதையும் மாட்டிறைச்சி விற்பனையையும் தடை செய்வது குறித்த அம்சங்கள் கொண்ட புதிய மசோதா ஒன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்துக்கள் புனிதமாக கருதும் விலங்குகளில் ஒன்று பசுமாடு என்பதும் பசுவை இந்துக்கள் தெய்வம் போல கும்பிட்டு வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் மாட்டிறைச்சி இந்துக்கோயில்கள் அருகிலேயே விற்பனை செய்யும் நிலை இருந்து வருவது இந்து பக்தர்களின் மனதை புண்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் அசாம் மாநில சட்டப்பேரவையில் இன்று இது குறித்த புதிய மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று நிறைவேற்றப்பட்டுள்ள புதிய கால்நடை பாதுகாப்பு மசோதாவில் இந்து கோவில்களுக்கு 5 மீட்டர் சுற்றளவில் மாடுகளை இறைச்சிக்காக கொல்லக்கூடாது என்றும், மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்துக்கள் மட்டுமின்றி ஜெயின்கள் மற்றும் சீக்கியர்கள் வசிக்கும் இடங்களிலும் கால்நடைகளை கொல்லவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுவதாக அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உரிய ஆவணங்களின்றி கால்நடைகளை ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு கொண்டு செல்வதும் இந்த புதிய மசோதாவின்படி குற்றமாக அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் இந்தக் குற்றத்தை செய்பவர்களுக்கு ஜாமீன் கிடைக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த மசோதா ’பாரத் மாதா கி ஜெய், ஜெய் ஸ்ரீ ராம் போன்ற முழக்கங்களுடன் சட்டப்பேரவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா4 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!