இந்தியா

கொரோனா தடுப்பூசி போடவில்லையா? சம்பளம் கிடையாது.. பஞ்சாப் அரசு அதிரடி!

Published

on

பஞ்சாப் மாநில அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடவில்லை என்றால், சம்பளம் கிடையாது என பஞ்சாப் அரசு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரசு ஊழியர்கள் பஞ்சாப் மாநில அரசின் iHRMS இணையதளத்தில், தாங்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழைப் பதிவேற்ற வேண்டும்.

கொரோனா தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் பட்டுவாடா செய்யப்படாது. குறைந்தது ஒரு கொரோனா தடுப்பூசியாவது போட்டு இருக்க வேண்டும். இது எல்லா அரசு ஊழியர்களுக்கும் கட்டாயம் என பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஓமிக்ரான் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில். பஞ்சாப் மாநில அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version