தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்தாத மின் ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் கிடையாது: அதிரடி சுற்றறிக்கை!

Published

on

மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் டிசம்பர் 7ஆம் தேதிக்குள் தடுப்பூசி செய்துக்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத அலுவலர்கள், பணியாளர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என மதுரை மண்டல தலைமை பொறியாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தடுப்பு மருந்து முதல் மற்றும் இரண்டாம் தவணை எதிர்வரும் டிசம்பர் 7ஆம் தேதிக்குள் செலுத்திக் கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அவ்வாறு தடுப்பு மருந்து செலுத்தி கொள்ளாத பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் டிசம்பர் மாத ஊதியம் நிறுத்தம் செய்யப்படும் என கடந்த நவம்பர் 26-ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் வாரிய தலைவர் அறிவுறுத்தல் செய்துள்ளார்.

ஆகவே தங்கள் வட்டத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தடுப்பு ஊசி மருந்து செலுத்தி கொண்டதற்கான விவர அறிக்கை தவறாமல் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்தாத அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உரிய மருத்துவச் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க அறிவுறுத்த அனைத்து மேற்பார்வை பொறியாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது குறித்த விரிவான அறிக்கையை டிசம்பர் 7ஆம் தேதி சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version