இந்தியா

நீதிமன்ற தீர்ப்பையும் மீறி ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள்: தேர்வை புறக்கணித்ததாக தகவல்

Published

on

பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் உள்பட எந்தவித மத அடையாளத்துடன் கூடிய உடைகளுக்கு தடை என கர்நாடக உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்த நிலையில் இந்த தீர்ப்பையும் மீறி ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரிகள் அனுமதிக்கப்படாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி உள்பட எந்தவித மத அடையாளத்துடன் கூடிய உடைகள் அனிந்து வரும் மாணவிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அனைத்து கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது .

ஆனால் அதனையும் மீறி மங்களூரில் உள்ள செயிண்ட் ரேமண்ட் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து 40 மாணவிகள் வந்தனர். இதனை அடுத்து கல்லூரி நிர்வாகம் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி அந்த மாணவிகளை கல்லூரிகள் அனுமதிக்க மறுத்தது.

இன்றைய தினம் தேர்வு என்பதால் தேர்வு எழுத அனுமதிக்குமாறு 40 மாணவிகள் கேட்டுக் கொண்டதை அடுத்து கல்லூரி நிர்வாகம் அனுமதி அந்த மாணவிகளிடம் ஹிஜாப்பை அகற்றிவிட்டு வந்தால் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என கூறியது.

ஆனால் மாணவிகள் ஹிஜாப்பை அகற்ற மறுத்து தேர்வு எழுதாமல் புறக்கணித்து சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Trending

Exit mobile version