தமிழ்நாடு

பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பு இல்லை:அமைச்சர் அன்பில் மகேஷ்

Published

on

பொது தேர்வுகள் தள்ளி போக வாய்ப்பே இல்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சற்று முன் அளித்த பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளில் பொதுத் தேர்தல் நடைபெறவில்லை என்றும் அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது பள்ளிகள் திறக்கபட்டு மீண்டும் இயல்பு வாழ்க்கை ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று அளித்த பேட்டியில் பொதுத்தேர்வுகள் கடந்த ஆண்டை போலவே மார்ச் ஏப்ரல் மாதங்களில் இந்த ஆண்டும் நடைபெறும் என்றும் தள்ளிப் போக வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்

மேலும் அரசு பள்ளிகளில் புதிதாக 6 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்றும் மாணவர்களின் பாதுகாப்புக்காக 1098 மற்றும் 14417 அறிய உதவி எண்கள் அனைத்து வகுப்புகளிலும் ஒட்டப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version