தமிழ்நாடு

இந்த ஆண்டும் பாடத்திட்டம் குறைக்கப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பதில் அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் குறைக்கப்பட்டது என்பதும் அதேபோல் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் செய்யப்பட்டனர் என்பதும் தெரிந்ததே.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்ததை அடுத்து தற்போது பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன என்பதும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மழை காரணமாக நவம்பர் மாதம் முழுவதும் பல நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பாடங்கள் நடத்துவதில சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை கணக்கில் கொண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்படுமா என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மனதில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் மழையால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும் பாடத்திட்டத்தை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பள்ளிகள் திறக்கப்பட்ட பின் கூடுதல் வகுப்புகள் வைத்து பாடங்களை நடத்தி முடிக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். எனவே இந்த ஆண்டு பாடத் திட்டத்தை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்பது அமைச்சரின் இந்த பேட்டியில் இருந்து தெரியவந்துள்ளது.

Trending

Exit mobile version