தமிழ்நாடு

கொள்கையே இல்லாத கட்சிக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி தேவையா? தங்க தமிழ்செல்வன் அதிரடி!

Published

on

தங்க தமிழ்செல்வனுக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில் ஒருவரை ஒருவர் தாக்கி ஊடகங்கள் முன்னிலையில் பேசி வருகின்றனர். இந்நிலையில் அமமுகவை கொள்கை இல்லாத கட்சி என்று விமர்சித்துள்ளார் தங்க தமிழ்செல்வன்.

மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் தங்க தமிழ்செல்வன். அப்போது செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை தங்க தமிழ்செல்வனை நோக்கி முன்வைத்தனர். அதற்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு.

கேள்வி: மனக்கசப்பு ஏற்படுவது இயற்கை. மீண்டும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளதா?
பதில்: இல்லை

கேள்வி: அதிமுகவுடன் இணைவதற்கான முடிவு உள்ளதா?
பதில்: அந்த முடிவே எடுக்கவில்லை. அந்தக் கட்சியுடன் பேசுகிறார். இந்தக் கட்சியுடன் பேசுகிறார் என்று இவர்களாகவே பரப்பி விடுகின்றனர்.

கேள்வி: என்னை பார்த்தால் பொட்டிப்பாம்பாக அடங்கிவிடுவார் என்று உங்களை சொல்லியிருக்கிறார் தினகரன்.
பதில்: அவர் ஒரு கட்சித் தலைவர். ஒரு பண்பாடு இல்லாமல் பேசுகிறார். பொட்டிப்பாம்பாக அடங்குவார் என்றால், நாங்கள் என்ன சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை செய்தோமா? அடங்க வேண்டிய அவசியம் என்ன? இப்படி ஒரு தலைவர் பேசலாமா? இவரது பேச்சை மக்கள் ரசிக்கவில்லை.

கேள்வி: தொண்டர்கள், நிர்வாகிகள் கருத்தை ஏற்க மாட்டாரா?
பதில்: யாருடைய கருத்தையும் ஏற்க மாட்டார்.

கேள்வி: நீங்கள் கொள்கைப்பரப்புச்செயலாளர்.
பதில்: கொள்கையே இல்லாத கட்சிக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி தேவையா?
இவ்வாறு தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார்.

Trending

Exit mobile version