இந்தியா

கார்ப்பரேட் விவசாயத்தில் ஈடுபட விருப்பமில்லை: ரிலையன்ஸ் நிறுவனம் திடீர் அறிவிப்பு!

Published

on

இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனமான ரிலையன்ஸ், ‘கார்ப்பரேட் விவசாயத்தில் ஈடுபட எங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை’ என்று திடீரென கூறியுள்ளது. மத்திய அரசு, சில மாதங்களுக்கு முன்னர் கொண்டு வந்த சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் பெருந்திரளான விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தச் சட்டங்கள் மூலம் கார்ப்பரேட்டுகள் அதிக பயனடைவார்கள் என்று தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதையொட்டி பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்குச் சொந்தமான தொலைதொடர்பு கோபுரங்களை பலர் சேதப்படுத்தி உள்ளனர். வேளாண் சட்டங்கள் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் பயனடையும் என்று கருதுவதால், சிலர் அந்நிறுவனத்துக்குச் சொந்தமான கோபுரங்களை சேதப்படுத்தி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இப்படி தங்கள் தொலைதொடர்பு கோபுரங்கள் சேதப்படுத்தப்படுவதை நிறுத்தக் கோரி, பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றங்களில் முறையிட்டுள்ளது ரிலையன்ஸ். தன் மனுவில் ரிலையன்ஸ், ‘பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் உள்ள 9,000 ரிலையன் ஜியோ டவர்களில், 1,500 சேதப்பட்டுத்தப்பட்டு உள்ளன. இதற்கு எதிராக முறையான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. எனவே இதைத் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுவரை ரிலையன்ஸ் குழுமம் சார்பில் கார்ப்பரேட் விவசாயம் செய்யப்பட்டதில்லை. இனிமேலும் அந்தத் துறையில் ஈடுபட எங்களுக்கு விருப்பமில்லை. நாங்கள் விவசாயிகளை மதிக்கிறோம். அவர்கள்தான் 130 கோடி இந்தியர்களுக்கும் பசி தீர்க்கும் வள்ளல்கள்’ என்று கூறியுள்ளது.

 

Trending

Exit mobile version