இந்தியா

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

Published

on

அரசு ஊழியர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தால் அவர்களது பாஸ்போர்ட் வழங்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட மாட்டாது.

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்த அரசு ஊழியர்கள் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் நிலுவையிலிருந்தால், குற்றத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தால், ஊழல் தடுப்பு சான்றிதழ் நிறுத்தி வைக்கப்பட்டு, அந்த பாஸ்பார்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்குச் சரி, ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள, அரசியல்வாதிகள் மற்றும் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் உள்ளவர்களின் பாஸ்போர்ட் பரிமுதல் செய்யப்படுமா, அல்லது நீரவ் மோடி போல தப்பிக்கவிடுவார்களா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

அதே நேரம் 4000 அரசு ஊழியர்கள் மீது ஊழல் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு பிப்ரவரி மாதம் மக்களவையில் தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version