தமிழ்நாடு

யாருக்கும் அடிமை இல்லை, யாரும் அடிமை இல்லை: முதல்வர் பழனிசாமி பஞ்ச்

Published

on

ஜெயலலிதா மறைந்த பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவை இரண்டாக பிரிக்க நினைத்தார் என்று முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் முதல்வர் பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ பதவி என்பது தோளில் போட்டிருக்கின்ற துண்டு போன்றது என்று அறிஞர் அண்ணா கூறினார். அவர் கூறியது போல், என்னை யாரும் விலை வாங்கவோ, அடிப்படுத்தவோ முடியாது. அதே போல் மதம், சாதி என்ற பெயரில் நான் யாரையும் பிரித்து பார்க்கவில்லை.

எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், அதிமுக அரசு அவர்களுடைய உடமையை பாதுகாக்கும். உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருக்கிறேன். அப்படி இருந்து தான் சேவையாற்றி வருகிறேன். இஸ்லாமிய பெண்கள் அதிமுக ஆட்சியில் அதிக அளவில் படிக்கின்றனர். மத்திய அரசு ஹஜ் பயணத்திற்கான நிதியை ரத்து செய்த போதிலும், அதனை ஈடு செய்யும் விதமாக, இஸ்லாமியர்களுக்கு அதிமுக அரசு ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்குகிறது. தமிழகத்தில் வீடு இல்லாதவர்களே கிடையாது என்ற நிலையை உருவாக்குவோம்’ இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

seithichurul

Trending

Exit mobile version