தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலில் நோட்டா இல்லை: யாருக்காவது வாக்களித்தே தீர வேண்டும்!

Published

on

ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பிடிக்கவில்லை என்றால் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற நோட்டா பட்டன் இருக்கும் என்ற நிலையில் உள்ளாட்சி தேர்தலில் நோட்டா பட்டன் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் நடைபெறும் என்று கூறப்பட்ட போதிலும் நோட்டா இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே வாக்காளர்கள் போட்டியிடும் வேட்பாளர்களில் யாராவது ஒருவரை தேர்வு செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. போட்டியிடும் வேட்பாளர்கள் யாரையும் பிடிக்காவிட்டால் நோட்டாவுக்கு வாக்களிக்கலாம் என்ற நடைமுறையை சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் இருந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை ஒரு வாக்கு வித்தியாசத்தில் கூட முடிவுகள் மாறும் என்பதால் நோட்டா இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் நோட்டா என்ற பட்டன் இல்லாதது பொது மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நோட்டாவுக்கு வாக்களிப்பதும், வாக்களிக்காமல் வீட்டில் இருப்பது ஒன்று என்றும் அரசியல் கட்சியினர் கருத்து கூறி வந்தாலும் வாக்காளர்கள் எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்ற நோட்டா பட்டன் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்றே வாக்காளர்கள் கூறிவருகின்றனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். இது ஒரு சில அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version