இந்தியா

இரவு நேரத்தில் முன்பதிவு செய்ய முடியாது: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

Published

on

ரயில்வே துறையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இன்னும் ஒரு வாரத்திற்கு இரவு நேரத்தில் முன்பதிவு செய்ய முடியாது என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 24 மணி நேரமும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பதும் அதேபோல் டிக்கெட் கேன்சல் செய்வது உள்பட அனைத்து பணிகளையும் செய்து கொள்ளலாம் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் ரயில் பயணிகளுக்கான சேவைகள் சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதன் காரணமாக இன்று முதல் ஒரு வாரத்திற்கு இரவு நேரத்தில் மட்டும் முன்பதிவு செய்ய முடியாது என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் இந்திய ரயில்வே வழங்கும் ஒரு சில சேவைகள் இரவு பதினொன்று முப்பது மணி முதல் அதிகாலை ஐந்து முப்பது மணி வரை வாடிக்கையாளர்கள் பயன் படுத்த முடியாது என்றும் இந்த நேரத்தில் டிக்கெட் முன்பதிவு, டிக்கெட் ரத்து மற்றும் விசாரணை சேவைகள் உள்பட அனைத்து சேவைகளும் நவம்பர் 20ஆம் தேதி வரை நிறுத்தப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதால் மீண்டும் ரயில்வே துறையை இயல்பு நிலைக்கு கொண்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பணிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் ஒருவாரம் இரவு நேர சேவை இல்லை என்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இதற்கு பயணிகள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version