வணிகம்

கடன் தவணை செலுத்த வழங்கப்பட்டுள்ள தடையை மீண்டும் நீட்டிக்கத் தேவையில்லை.. எஸ்பிஐ வங்கி தலைவர் ரஜினிஷ் குமார் அதிரடி!

Published

on

கொரோனா ஊரடகின் காரணமாக வழங்கப்பட்ட கடன் தவணை செலுத்துவதற்கான தடையை, மீண்டும் நீட்டிக்கத் தேவையில்லை என்று எஸ்பிஐ வங்கி தலைவர் ரஜினிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் கோரோனா தொற்று பரவுவதைக் குறைக்கும் நோக்கில் ஊரடங்கை அறிவித்து இருந்தது. தற்போது இந்த ஊரடங்கானது ஜூலை 31-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

ஊரடங்கால் மக்கள் பொருளாதாரத்தை இழக்க நேரிடும், கடன் வாங்கியுள்ளவர்களால் கடன் தவணையைச் செலுத்த முடியாமல் போகும் என்று நோக்கத்தில் , முதலாவதாக மார்ச் முதல் மே வரையிலும், பின்னர் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலும் என இரண்டு தவணையாகக் கடன் தவணையைச் செலுத்துவதற்கான விருப்ப தடையை பெறலாம் என ஆர்பிஐ அறிவித்தது.

அதன் பேரில், கடன் தவணையைச் செலுத்த முடியாதவர்கள், தாங்கள் கடன் பெற்றுள்ள வங்கி அல்லது நிறுவனங்களை அணுகி தவணையைச் செலுத்துவதற்கான தடையைப் பெறலாம் என்று அறிவித்து இருந்தது. இந்த தடையை, கடன் தவணையைச் செலுத்தக்கூடியவர்களும் பயன்படுத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆர்பிஐ கடன் தவணையைத் திருப்பி செலுத்துவதற்கான தடையை மீண்டும் 3 மாதம் வரை நீட்டிக்கலாம் என்று விவாதித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து எஸ்பிஐ வங்கி தலைவர் ரஜினிஷ் குமாரிடம் கேட்ட பொழுது, மக்களுக்குத் தேவையான அளவுக்குத் தவணை வசூலிப்பிற்கான தடை சலுகை வழங்கப்பட்டுவிட்டது. ஒருவேளை இது மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வங்கிகள் மட்டுமல்லாமல், சிறு வங்கி அல்லாத கடன் நிறுவனங்களும் பாதிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

கடன் தவணை தடை சலுகையை பெற்றால், கடன் நிலுவைத் தொகை மீதான வட்டி மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version