இந்தியா

கர்நாடகா செல்ல இனி இ-பாஸ் தேவையில்லை.. தனிமைப்படுத்தலும் கிடையாது.. படையெடுக்கும் வெளிமாநில ஊழியர்கள்!

Published

on

கர்நாடகாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், மத்திய அரசி கோரிக்கையை ஏற்று வெளிமாநில மற்றும் உள்ளூர் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எடியூரப்பா அரசின் இந்த அறிவிப்பின் படி மாநிலத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை. பிற மாநிலத்திலிருந்து கர்நாடகா வருவோருக்கும் இனி இ-பாஸ், கோவிட்-19 தொற்று பரிசோதனை போன்றவை தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இனி கர்நாடகாவிற்குத் தனிநபர் வாகனம், பேருந்து, ரயில் மற்றும் விமானம் மூலம் பயணிக்கும் போது அங்கு கோவிட்-19 தொற்று பரிசோதனை செய்யப்படாது.

அதுமட்டுமல்லாமல் மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டம் செல்வோர், வெளிமாநிலங்களிலிருந்து கர்நாடகா வருவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கையும் தேவையில்லை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இப்படி பொருளாதாரத்திற்காக முறையான பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தும் நடவடிக்கை இல்லாமல் பயணம் செய்ய அனுமதித்தால், கோவிட்-19 தொற்று வேகமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், குறைந்தது வெளியிலிருந்து வருவோர் மற்றும் செல்வோருக்கான பதிவேடாவது அவசியம் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கர்நாடக அரசின் இந்த அறிவிப்பால் வெளிமாநிலத்திலிருந்து அங்குச் செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version