உலகம்

பாஜக காங்கிரஸ் இரண்டிற்கும் தோல்விதான்.. மாநில கட்சிகள்தான் கிங் மேக்கர்.. கருத்து கணிப்பு

Published

on

டெல்லி: 2019 லோக் சபா தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாத மாநில கட்சிகள்தான் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் என்பது நேற்று வெளியான கருத்து கணிப்புகளில் இருந்து தெளிவாகி உள்ளது.

லோக் சபா தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு இந்தியா முழுக்க தேர்தல் பரபரப்பு அதிகம் ஆகி இருக்கிறது. தொடர்ந்து வரிசையாக நிறைய தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகிறது.

நேற்று மட்டும் ஏபிபி சி வோட்டர் சர்வே, இந்தியா டுடே கார்வி இன்சைட்ஸ் சர்வே, ரிபப்ளிக் டீவி சர்வே ஆகிய சர்வேக்கள் வெளியானது. இது அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான முடிவுகளை தெரிவிக்கிறது.

ஏபிபி சி வோட்டர் சர்வேயின்படி லோக் சபா தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. அதன்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 233 இடங்களில் வெற்றிபெறும். அதாவது மொத்தம் 33% இடங்களை பிடிக்கும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 167 இடங்களில் வெற்றிபெறும். அதாவது 32% இடங்களை பிடிக்கும். மற்ற மாநில கட்சிகள், சிறிய கட்சிகள் 143 இடங்களை பிடிக்கும். அதாவது 30% இடங்களை பிடிக்கும்.

seithichurul

Trending

Exit mobile version