தமிழ்நாடு

காதலர் தினம் கொண்டாட காசு இல்லை: ஆடு திருடிய இளைஞர்கள்!

Published

on

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இது அதிகபட்சமாக இளைஞர்களால் விமரிசையாக கொண்டாடப்படும். இந்நிலையில் 2 இளைஞர்கள் காதலர் தினத்தை கொண்டாட காசு இல்லாததால் ஆடு திருடிய வினோத சம்பவம் நடந்துள்ளது.

#image_title

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே மலையரசன்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதிகள் தனது வீட்டருகே ஆடு பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை திடீரென ஆடுகள் கத்த ஆரம்பித்துள்ளன. இதனால் சத்தம் கேட்டு எழுந்த உரிமையாளர் வெளியே வந்து பார்த்தபோது இரண்டு வாலிபர்கள் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் ஒரு ஆட்டை மட்டும் திருடி மோட்டர் பைக்கில் கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உரிமையாளர் திருடன், திருடன் என பலமாக சத்தம் எழுப்பியுள்ளார். இந்த சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அருகில் உள்ளவர்கள், ஆடு திருடிய அந்த இரண்டு வாலிபர்களையும் மடக்கி பிடித்து கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் செஞ்சி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இருபது வயதே ஆன இந்த இரண்டு வாலிபர்களும், பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை கொண்டாட கையில் காசு இல்லாததால், ஆடு திருடி விற்று அதில் வரும் காசை கொண்டு காதலர் தினத்தை கொண்டாட இருந்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் ஆடு திருடிய குற்றத்திற்காக இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் பைக்கையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version