இந்தியா

மெசேஜ் இல்லை, அழைப்பு இல்லை, OTP இல்லை: வங்கிக்கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் மோசடி..!

Published

on

மெசேஜ் அனுப்பாமல், ஓடிபி பெறாமல், கால் செய்யாமல் லட்சக்கணக்கில் மர்ம மனிதன், ஆசிரியர் ஒருவரின் வங்கி கணக்கிலிருந்து இலட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கி கணக்கிலிருந்து மர்மமான முறையில் திருடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் புதுப்புது முறைகளில் புதுப்புது டெக்னாலஜி மூலம் அவர்கள் அப்பாவிகளின் வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் மோசடி செய்து வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தெற்கு டெல்லியில் உள்ள ஆசிரியர் ஒருவரின் இரண்டு வங்கி கணக்கில் மர்ம மனிதர் ஒருவர் லட்சக்கணக்கில் ஏமாற்றியதாக தெரிகிறது. முதல் கட்ட விசாரணையில் அந்த ஆசிரியருக்கு எந்தவிதமான அழைப்பும் வரவில்லை என்றும், ஓடிபி பகிரப்படவில்லை என்றும், மெசேஜ் எதுவும் வரவில்லை என்றும் விசாரணை செய்த போலீசார் உறுதி செய்துள்ளனர்.

ஆனால் 3 மணி நேரத்தில் 8 பரிவர்த்தனைகள் மூலம் அவருடைய வங்கி கணக்கில் உள்ள முழு தொகையும் மோசடி செய்யப்பட்டுள்ளது என்பது மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அன்று ஆசிரியர் வார சந்தைக்கு சென்று இருந்ததாகவும் அவர் வீட்டுக்கு வருவதற்கு முன்னர் மூன்று மணி நேரத்தில் 8 பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதாகவும் மின்னஞ்சல் மூலம் கண்டார். இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவருடைய இரண்டு வங்கி கணக்க்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் உள்ளது என்றும் முதல் பரிவர்த்தனையில் 95 ஆயிரம் ரூபாய், வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் அதனை அடுத்தடுத்து 8 பரிவர்த்தனைகள் நடந்தது என்று அவருடைய வங்கி கணக்கில் உள்ள அனைத்து பணமும் மோசடி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிய வருகிறது.

சம்பந்தப்பட்ட ஆசிரியரின் செல்போனை கண்காணித்த போது எந்த விதமான மெசேஜ் வரவில்லை என்றும், ஓடிபி பகரப்படவில்லை என்றும் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். அப்படி என்றால் மர்ம மனிதர்கள் எப்படி அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்தார்கள் என்பது புரியாத மர்மமாக இருக்கிறது என்றும் அவருடைய போனை ஹேக் செய்து ஒரு வேலை மோசடி செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் குறிப்பிடத்தக்கது.

மோசடி செய்பவர்கள் புதிய டெக்னாலஜியை பயன்படுத்தி விதவிதமாக மோசடி செய்து வருவதால் வங்கி பயனாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version