இந்தியா

ஏப்ரல் 2 முதல் மாஸ்க் தேவையில்லை: அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!

Published

on

ஏப்ரல் 2ஆம் தேதி முதல் பொதுமக்கள் மாஸ்க் அணிய தேவையில்லை என அதிரடியால் அறிவித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்தியா முழுவதும் படிபடியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதும் நாடு முழுவதும் மிகக் குறைந்த அளவே தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கி கொண்டு வரும் மத்திய மாநில அரசுகள் தற்போது மேலும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன்படி ஏப்ரல் 2ஆம் தேதி முதல் பொதுமக்கள் மாஸ்க் அணிய தேவையில்லை என மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட உள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் இன்று 133 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் இந்த கட்டுப்பாடுகள் நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தை அடுத்து தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களிலும் மாஸ்க் அணிய தேவையில்லை என்ற அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Trending

Exit mobile version